இந்திய திருநாட்டின் பெயர்பலகை
பார்க்கும்போதே உடலெல்லாம்
மயிர் சிலிர்த்து நின்றுவிடும் !
பெயர்கூட தெரியாத இந்தியன்
வெல்லும் நாள்
ஒவ்வொருவருக்கம் பண்டிகை நாளாகும் !
இத்தகைய அறிதான நிகழ்வுகளை
நம்கண் முன்னே
கண்டிட துடித்தன இதயங்கள் !
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை
நம்நாட்டில் நடத்திட
அனுமதி பெற்று வந்தனர் !
ஒவ்வொரு குடிமகனும் தனக்கே
ஒதுக்கப்பட்ட வேலைகளை
மகிழ்ச்சியுடன் செய்ய முன்வந்தான் !
கோடிகளில் பணப் புழக்கம்
புதிதாய் கட்டிடங்கள்
சீரமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கங்கள் !
கனவுகளில் மிதந்த நம்மை
ஊழல் எனும்
அரக்கனால் ஒரேநாளில் கொன்றனர் !
இந்தியத் தாயின் மானம்
காத்திட நமக்கே
உரியவர்கள் இயன்றவரை உழைத்தனர் !
வெற்றிகரமாய் தொடக்கவிழா நிகழ்ச்சிகள்
இனிதே நடந்தேறின
இங்கிலாந்து இளவரசர் கௌரவிக்கப்பட்டார் !
அல்லும்பகலும் அயராமல் உழைத்தவர்கள்
பெயர்தெரியாமல் போயினர்
இது விதிக்கபட்டது தான்!!!
இந்த கவிதை எனது கல்லூரியில் நடந்த போட்டியில் எழுதியது ….. இதற்கு நன் பரிசு பெறவில்லை .. எனினும் எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன் …… படித்துவிட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கவும் …. நேர்மையான விமர்சனம் என்னை மேலும் மெருகேற்றும் …. படித்தமைக்கு நன்றி …… ..